/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அடிப்படை வசதிகளை செய்து தராவிட்டால் ராஜினாமா வார்டு உறுப்பினர்கள் மனு

ADDED : ஜூலை 16, 2024 07:24 AM

கள்ளக்குறிச்சி: க.செல்லம்பட்டு ஊராட்சியில் ஒரு வாரத்திற்குள் அடிப்படை வசதிகள் செய்து தராவிட்டால், ராஜினாமா செய்வோம் என கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பி.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த க.செல்லம்பட்டு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சின்னதுரை, பிரபு ஆகியோர் அளித்த மனு:
எங்களது ஊராட்சியில் 2, 3, 6, 8 மற்றும் 9வது வார்டுகளில் தெருமின்விளக்கு, குடிநீர், வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. எங்களது பகுதிகளில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி 6 மாதமாகிறது.
எங்களது வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு 100 நாள் வேலையும் வழங்குவதில்லை. மாதம் தோறும் வார்டு உறுப்பினர்களுடன் நடத்தப்பட வேண்டிய கூட்டத்தை ஊராட்சி தலைவர் அருணா நடத்தாமல் உள்ளார்.
பதிவேட்டில் கையெழுத்து வாங்குவதுமில்லை. எங்கள் பகுதியில் நிலவும் அடிப்படை பிரச்னைகளை ஒரு வார காலத்திற்குள் சரி செய்து தராவிட்டால், வார்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.