ADDED : ஜூலை 16, 2024 07:21 AM

திருக்கோவிலுார்: வீரபாண்டியில் சாராயம் விற்ற வாலிபரை போலீசார் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்தனர்.
அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் மகன் சூர்யா, 23; அப்பகுதியில் தொடர்ந்து சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்தார். கடந்த மாதம் 20ம் தேதி அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீத் மற்றும் போலீசார் நடத்திய சோதனையில் சூர்யா 10 லிட்டர் சாராயத்தை பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்து, அவரை கைது செய்து, விழுப்புரம் கிளைச் சிறையில் அடைத்தனர்.
இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி தீபக்சிவாச் பரிந்துரையின் பேரில், சூர்யாவை தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க விழுப்புரம் கலெக்டர் பழனி உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று சூர்யாவை தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை விழுப்புரம் கிளைச் சிறையில் உள்ள சூர்யாவிடம், அரகண்டநல்லுார் போலீசார் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து சூர்யா கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.