/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பல்லி விழுந்த காலை உணவு 10 மாணவர்கள் 'அட்மிட்'
/
பல்லி விழுந்த காலை உணவு 10 மாணவர்கள் 'அட்மிட்'
ADDED : ஜன 10, 2024 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்:கள்ளக்குறிச்சி மாவட்டம், அவிரியூர் அரசு நடுநிலைப்பள்ளியில், 153 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டத்தில் தினமும் சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
நேற்று காலை 8:00 மணிக்கு 96 மாணவர்களுக்கு வெண்பொங்கல் பரிமாறியபோது, அதில் பல்லி இறந்து கிடந்தது. அதை சாப்பிட்ட 10 மாணவர்கள் மற்றும் 3 சமையலர்களுக்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

