/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மது பாட்டில் விற்ற 2 பேர் கைது
/
மது பாட்டில் விற்ற 2 பேர் கைது
ADDED : ஜூன் 02, 2025 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் சபரிமலை தலைமையிலான போலீசார் நேற்று கரடிசித்தூர், க.அலம்பலம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் அருகே மது பாட்டில் விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த வடிவேல், 57; என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதே போல் க.அலம்பலம் கிராமத்தில் மது பாட்டில் விற்ற கண்ணன் மனைவி அமுதா, 38; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.