/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கஞ்சா கடத்திய 4 பேர் கைது கார் பறிமுதல்
/
கஞ்சா கடத்திய 4 பேர் கைது கார் பறிமுதல்
ADDED : செப் 29, 2025 01:06 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் காரில் கஞ்சா கடத்தி சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப்இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் நகர பகுதியில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த மாருதி சுசூகி ஸ்விப்ட் காரை நிறுத்தி சோதனை செய்தபோது, காரில் கஞ்சா இருப்பது தெரிந்தது.
விசாரணையில், கள்ளக்குறிச்சி பழைய மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் சின்னையா, 20; சிறுவங்கூரை சேர்ந்த ஞானவேல் மகன் ஜெனார்த்தனன், 20; கேசவலு நகரை சேர்ந்த கணேசன் மகன் பிரகாஷ், 22; கிருஷ்ணா நகரை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் சந்தோஷ், 25; என்பதும், விற்பனைக்காக கஞ்சா எடுத்து சென்றதும் தெரிந்தது.
இதையடுத்து, நால்வரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 167 கிராம் கஞ்சா, எடை மிஷின், அலுமினிய பைப் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

