/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மனைவியை தாக்கியகணவன் மீது வழக்கு
/
மனைவியை தாக்கியகணவன் மீது வழக்கு
ADDED : ஜன 09, 2024 10:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி, -அக்கராயபாளையத்தில் மனைவியை தாக்கி மிரட்டிய கணவன் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கச்சிராயபாளையம் அடுத்த அக்கராயபாளையத்தை சேர்ந்தவர் துரைராஜ் மனைவி நதியா,35; இருவருக்கும் திருமணமாகி 19 வருடங்களான நிலையில், கணவன் துரைராஜ் பலருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 2ம் தேதி நதியாவை தாக்கி, வீட்டை விட்டு செல்லுமாறு கூறினார். இல்லையெனில் துாக்கு போட்டுக்கொள்வேன் என மனைவியை துரைராஜ் மிரட்டியுள்ளார்.
நதியா அளித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் ரங்கசாமி மகன் துரைராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

