/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 09, 2024 10:34 PM

சங்கராபுரம் - சங்கராபுரத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ்.,கல்லுாரி சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணிக்கு கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணிக்கு பி.டி.ஓ.,க்கள் ஐயப்பன்,ஜெய்கணேஷ், சங்கராபுரம் பேரூராட்சித் தலைவர் ரோஜாரமணி தாகப்பிள்ளை, துணை தலைவர் ஆஷா பீ முன்னிலை வகித்தனர்.சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் திலகவதி நாகராஜன் பேரணியை கொடியசைத்து துவக்கிவைத்தார். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
பொது மக்களுக்கு போதை பொருட்கள் ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பேரணியில் கல்லுாரி மாணவர்கள்,ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

