/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
/
பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜன 09, 2024 10:37 PM
கள்ளக்குறிச்சி, - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தகுதி வாய்ந்த தனி நபர்கள், நிறுவனங்கள் பசுமைச் சாம்பியன் விருதுக்கு விண்ணபபிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திகுறிப்பு;
தமிழ்நாடு பசுமை சாம்பியன் 2023ம் ஆண்டிற்கான விருது சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் வழங்கப்படுகிறது. மாநில அளவில் தனி நபர்கள், அமைப்புகளுக்கு என 100 பேருக்கு வழங்கி தலா ஒரு லட்சம் வீதம் பண முடிப்பு வழங்க உள்ளது.
மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுகளை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனி நபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.
மாவட்டத்தில் தேர்வு குழு மூலம் தகுதி வாய்ந்த மூன்று தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் தேர்வு செய்யபடும். இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரிய இணையதளமான www.tnpcb.gov.in பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்த இரண்டு விண்ணப்பங்கள் மற்றும் பதிவவேற்றம் செய்த டிவிடி ஆகிவயற்றை கலெக்டர் அலுவலகத்தில் வரும் ஏப்.,15 ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

