/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி
/
விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி
ADDED : அக் 20, 2025 09:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த மூக்கனுார் கிராமத்தில் ஆத்மா திட்டத்தின் மூலம் கிசான் கடன் அட்டை குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
ஆத்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுதா ஆத்மா திட்டங்கள், வேளாண்மை துறையில் மானிய திட்டங்கள் குறித்து பேசினார். அதேபோல், அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையத்தின் உதவி பேராசிரியர் அய்யாதுரை, வேளாண் துறை தொழில் நுட்பங்கள், பயிர்களின் சாகுபடி குறித்து விளக்கினார். உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடேசன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். பயிற்சியை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருண்குமார், லோக பிரியா ஏற்பாடு செய்திருந்தார்.

