நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: மணலுார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம், மணலுார்பேட்டை அரிமா சங்கம் மற்றும் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
மாவட்ட தலைவர்கள் ரவிச்சந்திரன், சையத்அலி, ஜெய்கணேஷ், முருகன், சரவணன் முன்னிலை வகித்தனர். அரிமா சங்கத் தலைவர் திருமால் தலைமை தாங்கினார்.
மாவட்ட இணை பொருளாளர் அம்முரவிச்சந்திரன் முகாமினை துவக்கி வைத்தார்.
முகாமில் அரிமா சங்க நிர்வாகிகள் சண்முகம், ராசிதுரை உள்ளிட்ட 28 பேர் ரத்த தானம் வழங்கினர்.

