
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி, - கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லஷ்மி கல்வி நிறுவனத்தில் விளையாட்டு ஆண்டு விழா நடந்தது.
கல்லுாரி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் சசிகலா வரவேற்றார்.
கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் சிராஜ்தீன், பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லுாரி விளையாட்டு துறை சாதனைகள் குறித்த ஆண்டறிக்கையினை உடற்கல்வி ஆசிரியர் அரவிந்தன் எடுத்துரைத்தார்.
பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கல்லுாரி துணை முதல்வர் சக்திவேல் நன்றி கூறினார்.

