நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சங்கம் சார்பில் டிராக்டர் மற்றும் பைக் பேரணி நடந்தது.
பேரணிக்கு, சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மணி தலைமை தாங்கினார். நீலமங்கலம் ஏ.கே.டி., பள்ளியில் இருந்து நகரத்தின் முக்கிய வழியாக பேரணி நடந்தது.
அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் குறைந்த பட்ச ஆதரவு விலை கிடைக்க வழிவகை செய்தல், பயிர்க்கடனை தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடந்தது.

