/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
/
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 02, 2024 04:10 AM
ரிஷிவந்தியம்: நுாரோலை பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நுாரோலை பெரியாயி அம்மன் கோவில் உள்ள கீழ்பாடி சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இப்பகுதியில் டாஸ்மாக் கடை செயல்படுவதால் பெரும்பாலான குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகி வருவதாக கூறி கடையை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.
ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் 100க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று முன்தினம் கடை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த திருக்கோவிலுார் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராதிகா மற்றும் ரிஷிவந்தியம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து கடையை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தனர். இதனையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

