கள்ளக்குறிச்சி, - கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் சார்பில், பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் செல்வராஜ், துணைத் தலைவர் காந்தி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரவி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
மாநில துணைத் தலைவர் மகாலிங்கம் சிறப்புரையாற்றினார். சுகாதார ஆய்வாளர்களின் பணியிடங்கள் குறித்த குழப்பங்களை ஏற்படுத்தும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். சுகாதார ஆய்வாளர் நிலை-2 பணி நியமனத்திற்கு தடையாக உள்ள வழக்குகளை முடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் சுந்தர்பாபு நன்றி கூறினார்.

