/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கடுவனுாரில் 200 சவரன் நகை கொள்ளை டி.ஐ.ஜி., ஆய்வு ; 5 தனிப்படை அமைப்பு
/
கடுவனுாரில் 200 சவரன் நகை கொள்ளை டி.ஐ.ஜி., ஆய்வு ; 5 தனிப்படை அமைப்பு
கடுவனுாரில் 200 சவரன் நகை கொள்ளை டி.ஐ.ஜி., ஆய்வு ; 5 தனிப்படை அமைப்பு
கடுவனுாரில் 200 சவரன் நகை கொள்ளை டி.ஐ.ஜி., ஆய்வு ; 5 தனிப்படை அமைப்பு
ADDED : ஜூலை 05, 2025 03:32 AM

சங்கராபுரம்: கடுவனுார் கிராமத்தில் 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., உமா நேரில் ஆய்வு செய்தார். கொள்ளையர்களை பிடிக்க டி.எஸ்.பி., தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சங்கராபுரம் அடுத்த கடுவனுார் கிராமத்தை சேர்ந்தவர் முனியன் மகன் கேசவவர்மன்,43; இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் அதிகாலை முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் கேசவவர்மனின் தந்தை முனியன், 70; தாய் பொன்னம்மாள், 65; ஆகியோரை கட்டிப்போட்டு மிரட்டி, வீட்டிலிருந்த 200 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., உமா, கொள்ளை நடந்த கேசவவர்மனின் வீட்டில் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, போலீசார் மேற்கொண்ட விசாரணை, சேகரிக்கப்பட்டுள்ள ஆதாரம், சி.சி.டி.வி., காட்சிகள் குறித்து கேட்டறிந்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார். ஆய்வின்போது, சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்ய, திருக்கோவிலுார் டி.எஸ்.பி., பார்த்திபன் மேற்பார்வையில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.