/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திரவுபதியம்மன் கோவில் தேர் திருவிழா
/
திரவுபதியம்மன் கோவில் தேர் திருவிழா
ADDED : மே 24, 2025 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி திரவுபதியம்மன் கோவில் தேர் திருவிழாவில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த ஈய்யனுார், திரவுபதியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த, 16ம் தேதி துவங்கியது. தேர் திருவிழாவையொட்டி, காலை 5:30 மணிக்கு, அர்ஜூனன் தபசு மரம் ஏறுதல், அரவான் பலி, அர்ச்சுனன் மாடு திருப்புதல், காளி கோட்டை இடித்தல், தீ மிதித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாலை 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார்.
பக்தர்கள் தேரோடும் வீதி வழியாக தேர்வடம் பிடித்தனர். விழாவிற்கான ஏற்பாட்டினை கிராம மக்கள் மேற்கொண்டனர்.