
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே, தனி நபர் ஆக்கிரமிப்பை வருவாய்த்துறையினர் அகற்றினர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த புத்திராம்பட்டில் இருந்து மல்லாபுரம் செல்லும் வழியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து, விவசாயம் செய்து வந்தார். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து சங்கராபுரம் தாசில்தார் விஜயன் தலைமையில் வருவாய்த்துறையினர், நேற்று அந்த இடத்தில் இந்த ஆக்கிரமிப்புகளை, ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றினர். அப்போது, வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

