/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பயிற்சி போலீசாருக்கு பரிசளிப்பு
/
பயிற்சி போலீசாருக்கு பரிசளிப்பு
ADDED : ஜன 17, 2024 07:47 AM

உளுந்துார்பேட்டை : திருவள்ளுவர் தினத்தையொட்டி, உளுந்துார்பேட்டை அடுத்த பாலியில் தமிழ்நாடு சிறப்பு காவல் 10ம் பட்டாலியன் அணி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பயிற்சி போலீசாருக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
விழாவிற்கு பட்டாலியன் அணி தளவாய் மணிவர்ணன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக உளுந்துார்பேட்டை தொகுதி மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்தார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவராஜ், மாவட்ட கவுன்சிலர் பிரியா பாண்டியன், உதவி தளவாய் பாலசுப்ரமணியன், பயிற்சி போலீசார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நேர் துணை ஆய்வாளர் சம்மர்சிங் நன்றி கூறினார்.

