/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீட்டுப்பணி தொழிலாளர்கள் நல வாரியத்தில் சேர உதவி மையம்
/
வீட்டுப்பணி தொழிலாளர்கள் நல வாரியத்தில் சேர உதவி மையம்
வீட்டுப்பணி தொழிலாளர்கள் நல வாரியத்தில் சேர உதவி மையம்
வீட்டுப்பணி தொழிலாளர்கள் நல வாரியத்தில் சேர உதவி மையம்
ADDED : ஜூன் 20, 2025 04:01 AM
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் வீட்டுப்பணி தொழிலாளர்கள் இணையதளம் மூலம் நல வாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகரன் விடுத்த செய்திக்குறிப்பு:
வீட்டுப்பணி தொழிலாளர்களை இணையதளம் மூலம் நலவாரியத்தில் பதிவு செய்வதற்காக சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள பணியாளர்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வங்கி புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் உள் ளிட்ட அசல் ஆவணங்களுடன், எண்23/ஏ, தாய் இல்லம், அண்ணாநகர் பிரதான சாலை, கள்ளக்குறிச்சி - 606202, என்ற முகவரியில் இயங்கும் கள்ளக்குறிச்சி சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரில் சமர்பித்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். இதன் மூலம் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து, நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடையலாம்.