/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மனைவி, குழந்தைகள் மாயம் கணவர் போலீசில் புகார்
/
மனைவி, குழந்தைகள் மாயம் கணவர் போலீசில் புகார்
ADDED : செப் 14, 2025 01:05 AM
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை என கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
உளுந்துார்பேட்டை அடுத்த பாதூர், காந்தி நகரை சேர்ந்தவர் அய்யப்பன்,28; பஸ் டிரைவர். இவரது மனைவி அனந்தாயி, 26; இவர்களுக்கு வசீகரன், 5; அஸ்விதா, 2; இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 9ம் தேதி காலை 10:00 மணிக்கு, அய்யப்பன் மற்றும் அவரது மனைவி மற்றும் அவரது குழந்தைகள் நான்கு பேரும் உளுந்துார்பேட்டை அருகே மடப்பட்டு கிராமத்தில் உள்ள துணி கடைக்கு சென்றனர்.
அய்யப்பன் வேலை உள்ளதாக கூறிவிட்டு, மூவரும் துணி எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வரும்படி கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். வெகு நேரம் ஆகியும் மூவரும் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அய்யப்பன் அளித்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.