ADDED : பிப் 25, 2024 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
திருக்கோவிலுார், சந்தைப்பேட்டையில், ஒன்றிய அலுவலகம் 3.90 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவில் ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, அய்யனார், ஒன்றிய சேர்மன் அஞ்சலாட்சிஅரசகுமார், துணைச் சேர்மன் தனம் சக்திவேல் முன்னிலை வகித்தனர். வெங்கடேஸ்வரா கன்ஸ்ட்ரக் ஷன் உரிமையாளர் தமிழரசன் வரவேற்றார்.
வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி புதிய கட்டடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார். மாவட்ட துணைச் சேர்மன் தங்கம், பி.டி.ஓ., நாகராஜன், அலுவலக மேலாளர் தேவி உட்பட பலர் பங்கேற்றனர்.