/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பா.ஜ., நடை பயணம் பங்கேற்க அழைப்பு
/
பா.ஜ., நடை பயணம் பங்கேற்க அழைப்பு
ADDED : ஜன 25, 2024 11:47 PM

திருக்கோவிலுார் : விழுப்புரம் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட விழுப்புரம், திருக்கோவிலுார் தொகுதியில் நாளை (27 ம் தேதி) பா.ஜ., வின் 'என் மண்; என் மக்கள்' நடை பயணத்தில் திரளாக கலந்து கொள்ள மாவட்டத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை 'என் மண்; என் மக்கள்' சுற்றுப்பயணத்தில் ஒரு பகுதியாக நாளை விழுப்புரம், திருக்கோவிலுார் தொகுதியில் நடை பயணம் மற்றும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகின்றார்.
இதில் விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் பிரம்மாண்ட அளவில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
இதில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் அணி திரள வேண்டும் என மாவட்டத் தலைவர் கலிவரதன் கேட்டுக் கொண்டுள்ளார்.

