/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் ஜூவல் ஒன் நிறுவனத்தின் தங்கம், வைர நகைகள் விற்பனை கண்காட்சி
/
கள்ளக்குறிச்சியில் ஜூவல் ஒன் நிறுவனத்தின் தங்கம், வைர நகைகள் விற்பனை கண்காட்சி
கள்ளக்குறிச்சியில் ஜூவல் ஒன் நிறுவனத்தின் தங்கம், வைர நகைகள் விற்பனை கண்காட்சி
கள்ளக்குறிச்சியில் ஜூவல் ஒன் நிறுவனத்தின் தங்கம், வைர நகைகள் விற்பனை கண்காட்சி
ADDED : ஜன 27, 2024 12:55 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் ஜூவல் ஒன் சார்பில், தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனை கண்காட்சி நடக்கிறது.
கள்ளக்குறிச்சி சுந்தரவிநாயகர் கோவில் தெரு மகாலஷ்மி திரையரங்கம் அருகே எஸ்.ஆர்.பார்க் மகாலில், ஜூவல் ஒன் சார்பில், தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனை கண்காட்சி நடக்கிறது. கண்காட்சியில், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் வைர நகைகள் 2000க்கும் அதிகமான டிசைன்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியில் நகைகள் வாங்கும் அனைவருக்கும், சிறப்பு சலுகைகள் மற்றும் நிச்சய பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஜூவல் ஒன் வர்த்தக மேலாளர் ராஜ்கல் பிரபு கூறியதாவது:
கள்ளக்குறிச்சியில், ஜூவல் ஒன் சார்பில், நடக்கும் நகை கண்காட்சியில் எமரால்டு பேக்டரியில் தயாரிக்கப்பட்டுள்ள திருமண நகைகள் மற்றும் லைட் வெயிட் நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தங்க நகைகள் ஒரு கிராமிற்கு ரூ.100 தள்ளுபடியுடன் நிச்சய பரிசு வழங்கப்படுகின்றன.
பழைய நகைகளை கொடுத்து புதிய நகைகள் வாங்கும் எக்ஸ்சேஞ்ச் வசதியும் உள்ளது. உயர் தரத்தினாலான நகைகள் புத்தம், புதிய மாடல்களுடன், ஆண்டிக் எனும் பாரம்பரிய டிசைன்களிலும் ஏராளமான கலெக்ஷன்களில் நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு டிசைன்களில் மாற்றம் செய்து கொடுக்கும் வசதியும் உள்ளது. ரூ.200 முதல் வெள்ளி நகைகளின் அணிவரிசையும் துவங்குகிறது. வரும் ஞாயிறு 28-ம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை விற்பனை கண்காட்சி நடக்கிறது என கூறினார்.

