/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடியரசு தின விழா உற்சாகம்! கலெக்டர் தேசிய கொடியேற்றி வைத்தார்
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடியரசு தின விழா உற்சாகம்! கலெக்டர் தேசிய கொடியேற்றி வைத்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடியரசு தின விழா உற்சாகம்! கலெக்டர் தேசிய கொடியேற்றி வைத்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடியரசு தின விழா உற்சாகம்! கலெக்டர் தேசிய கொடியேற்றி வைத்தார்
ADDED : ஜன 27, 2024 12:54 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் ஷ்ரவன்குமார் தேசிய கொடியேற்றி வைத்து, மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்கள், பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார், எஸ்.பி., சமய்சிங் மீனா முன்னிலையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பினை பார்வையிட்டு, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
விழாவில் தேசிய கொடியின் மூவர்ண பலுான்கள் மற்றும் சமாதானத்தை பறைசாற்றும் விதமாக வெண் புறாக்களை கலெக்டர், எஸ்.பி., ஆகியோர் வானில் பறக்க விட்டனர். பின்னர் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 29 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களை கலெக்டர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய முன்னாள் படைவீரர் நலன், காவல் துறை, வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி, மருத்துவம் மற்றும் சுகாதாரம், 108 ஆம்புலன்ஸ், வேளாண் மற்றும் உழவர் நலன், தோட்டக்கலை, பொதுப்பணித்துறை, பள்ளி கல்வி, கால்நடை துறை, மாற்றுத்திறனாளிகள் நலம், வட்டார போக்குவரத்து அலுவலகம், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல், மின்துறை, கூட்டுறவு, சமூக பாதுகாப்பு திட்டம், செய்தி மக்கள் தொடர்பு துறை, தேர்தல் உள்ளிட்ட 47 அரசு துறைகளைச் சேர்ந்த 174 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அவர்களது சிறப்பான பணியினை பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மேலும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்குபெற்ற காவலர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டது.
பின்னர், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் பயனாளி ஒருவருக்கு பராமரிப்பு தொகையாக ரூ.25 ஆயிரம் காசோலை, சுதந்திர போராட்ட தியாகியின் மத்திய அரசு குடும்ப ஓய்வூதியம் 3 பயனாளிளுக்கு, சமூக சேவைகள் புரிந்தமைக்காக பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அதில் முதல் மூன்று இடங்களை பிடித்த முறையே உளுந்துார்பேட்டை சாரதா மெட்ரிக் பள்ளி, கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மெட்ரிக் பள்ளி, மயிலம்பாறை புனித ஜோசப் பள்ளி மற்றும் சிறப்பு பரிசாக தியாகதுருகம் மவுண்ட் பார்க் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.
விழாவில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, கலெக்டர் நேர்முக உதவியாளர்(பொது) யோகஜோதி, மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், கலால் உதவி ஆணையர் பிரபாகரன், வேளாண்மை இணை இயக்குனர் அசோக்குமார், சி.இ.ஓ., முருகன், ஆர்.டி.ஓ., கிருஷ்ணன், சுகாதார மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் பாலச்சந்தர், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணி திட்ட அலுவலர் செல்வி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளரர் ரூபியா பேகம், மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

