/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தீபாவளியையொட்டி கேதார கவுரி நோன்பு: பூஜை பொருட்கள் விற்பனை படுஜோர்
/
தீபாவளியையொட்டி கேதார கவுரி நோன்பு: பூஜை பொருட்கள் விற்பனை படுஜோர்
தீபாவளியையொட்டி கேதார கவுரி நோன்பு: பூஜை பொருட்கள் விற்பனை படுஜோர்
தீபாவளியையொட்டி கேதார கவுரி நோன்பு: பூஜை பொருட்கள் விற்பனை படுஜோர்
ADDED : அக் 20, 2025 09:24 PM

கள்ளக்குறிச்சி: தீபாவளியையொட்டி, கேதார கவுரி நோன்புக்கு தேவையான பூஜை பொருட்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாப்பட்டது. இந்நிலையில் தீபாவளி மற்றும் அமாவாசை நாளில் பெரும்பாலான வீடுகளில் சுமங்கலி பெண்கள் தீபாவளி கேதாரி கவுரி நோன்பு எடுப்பது வழக்கம்.
இதற்காக 21 எண்ணிக்கையில் அதிரசம், முறுக்கு, வடை, வாழைப்பழம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு பூஜை பொருட்களை புதிய மண் பானையில் எடுத்துச் சென்று அருகில் உள்ள கோவில்களில் வழிபாடு செய்வர். பின்னர், பூஜை செய்த கயிறுகளை கையில் கட்டிக் கொள்வர்.
இதற்காக கள்ளக்குறிச்சி மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் கேதாரி கவுரி நோன்புக்கு தேவையான பூஜை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது. பெண்கள் ஆர்வமுடன் பூஜை பொருட்கள் வாங்கி சென்றனர்.
தீபாவளி நாளான நேற்று கிராமப்புறங்களில் உள்ள அம்மன் மற்றும் சிவன் கோவிலில் பெண்கள் நோன்பு எடுத்து வழிபட்டனர்.
அமாவாசையான இன்று கேதாரி கவுரி நோன்பு பூஜை கள்ளக்குறிச்சி கோவில்களில் நடக்கிறது.