/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி
/
கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி
ADDED : ஜன 10, 2024 11:28 PM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே சாரம் கட்டும் பணியில் ஈடுபட்ட கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி இறந்தார்.
திருக்கோவிலுார்  அடுத்த மணம்பூண்டி, உமா மகேஸ்வரி தெருவில் வீடு கட்டிவருபவர் ஜோனதாஸ் மகன் அருளப்பன், 37;  நேற்று இவரது வீட்டின் மாடியில் சாரம் கட்டும் பணி நடந்து வந்தது. தகடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஏழுமலை, 38; பணியில் ஈடுபட்டிருந்தார்.
மதியம் ஒரு மணி அளவில் வீட்டுக்கு மேலே சென்ற மின் ஒயர் உரசியதால் மின்சாரம் தாக்கி ஏழுமலை காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக திருக்கோவிலுார்  அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை  பரிசோதித்த டாக்டர்கள் , அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அவரது மனைவி உதயா கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார்  போலீசார் வீட்டின் உரிமையாளர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

