ADDED : மார் 21, 2025 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே களைக்கொல்லி குடித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த அழகாபுரத்தை சேர்ந்தவர் செல்லப்பிள்ளை மகன் பொன்னுவேல்,38; இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் குடும்பத்தை சரிவர கவனிக்க முடியாத வருத்தத்தில் இருந்தார்.
இந்நிலையில் கடந்த, 17ம் தேதி 'களைக்கொல்லி' மருந்தை குடித்தார். குடும்பத்தினர் உடனடியாக, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்யில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.