/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரூ.2 லட்சம் பணத்துடன் மாயமான நபருக்கு வலை
/
ரூ.2 லட்சம் பணத்துடன் மாயமான நபருக்கு வலை
ADDED : செப் 16, 2025 07:29 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் ஜவுளி கடையில் புதிதாக வேலைக்கு சேர்ந்து, ரூ.2.10 லட்சம் பணத்துடன் மாயமான நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூர் கிராமத்தை சேர்ந்த அப்துல்சத்தார் மகன் அப்துல்ஹமீது, 35; கள்ளக்குறிச்சி தனியார் ஜவுளி கடை மேலாளர். இவரிடம், கடந்த ஆக., 25ம் தேதி சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்த சேகர் மகன் மணிகண்டன், தனது ஆதார் கார்டினை சமர்ப்பித்து கடையில் வேலைக்கு சேர்ந்தார்.
கடந்த 11ம் தேதி அப்துல்ஹமீது ரூ.2.10 லட்சம் பணம், ரூ.10 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் தனது சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்கினை மணிகண்டனிடம் கொடுத்து வங்கி கணக்கில் செலுத்தி விட்டு வருமாறு தெரிவித்தார்.
பணம் மற்றும் பைக் வாங்கி சென்ற மணிகண்டன் நீண்ட நேரமாகியும் மீண்டும் கடைக்கு வரவில்லை. மணிகண்டன் மொபைல்போன் சுவிட்ச்ஆப் ஆனது. மணிகண்டன் ஓட்டி சென்ற பைக் விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தியிருக்கும் தகவல் கிடைத்தது.
இது குறித்து அப்துல்ஹமீது அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து மணிகண்டனை தேடி வருகின்றனர்.

