/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் எம்.எல்.ஏ., ஆய்வு புனரமைப்பு பணியை துரிதப்படுத்த அறிவுறுத்தல்
/
அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் எம்.எல்.ஏ., ஆய்வு புனரமைப்பு பணியை துரிதப்படுத்த அறிவுறுத்தல்
அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் எம்.எல்.ஏ., ஆய்வு புனரமைப்பு பணியை துரிதப்படுத்த அறிவுறுத்தல்
அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் எம்.எல்.ஏ., ஆய்வு புனரமைப்பு பணியை துரிதப்படுத்த அறிவுறுத்தல்
ADDED : செப் 20, 2025 07:17 AM

ரிஷிவந்தியம் : அர்த்தநாரீஸ்வரர் கோவில் புனரமைப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது தொடர்பாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான நிலையில், எம்.எல்.ஏ., ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்த அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
ரிஷிவந்தியம் முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் சேதமடைந்த நிலையில் இருந்தது. இக்கோவிலை புனரமைக்க அறநிலையத்துறை சார்பில் 66 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி பணிகள் துவங்கியது.
இதில், ராஜ கோபுரம், சன்னதி கோபுரங்கள் செப்பனிட்டு, கோவில் வளாகத்தில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள போதிய நிதி இல்லாததால் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
இது குறித்து சில தினங்களுக்கு முன் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்.
கோவில் மேற்புறத்தில் பாரம்பரிய முறைப்படி ஓடுகள் பதித்து தளம் அமைத்தல், தரையில் கல் பதித்தல், யாகசாலை மண்டபம் மற்றும் பலி பீடம் சுற்றி சில்வர் கிரில் அமைத்தல், மின்சார பணிகள், பிரதான கதவு புதுப்பித்தல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து கார்த்திகை மாதத்திற்குள் திருப்பணிகளை முடித்து விரைவில் கும்பாபிேஷகம் நடத்த வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், ஆய்வாளர் புருேஷாத்தமன், தாசில்தார் வெங்கடேசன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் பெருமாள், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், பி.டி.ஓ., துரைமுருகன், ஜெகநாதன், ஊராட்சி தலைவர் வினிதா மகேந்திரன், நிர்வாகிகள் சிவமுருகன், இதயதுல்லா, துரைராஜ் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்.