/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிலை அகற்றும் போது தகராறு 4 பேர் மீது போலீசார் வழக்கு
/
சிலை அகற்றும் போது தகராறு 4 பேர் மீது போலீசார் வழக்கு
சிலை அகற்றும் போது தகராறு 4 பேர் மீது போலீசார் வழக்கு
சிலை அகற்றும் போது தகராறு 4 பேர் மீது போலீசார் வழக்கு
ADDED : ஜூலை 05, 2025 03:34 AM
கள்ளக்குறிச்சி: எஸ்.ஒகையூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட ராஜ ராஜ சோழன் சிலையை அகற்றும்போது தகராறில் ஈடுபட்டதாக, 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
வரஞ்சரம் அடுத்த எஸ்.ஒகையூர், குளத்துமேட்டு தெரு பொதுமக்கள் சார்பில், கடந்த 30ம் தேதி இரவு, அப்பகுதியில் ராஜ ராஜ சோழனுக்கு சிலை வைத்தனர். தகவலறிந்த கள்ளக்குறிச்சி தாசில்தார் பசுபதி தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து, அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலையை அகற்றுமாறு தெரிவித்து, 2ம் தேதி பிற்பகல் வரை கால அவகாசம் அளித்தனர். ஆனால் பொதுமக்கள் சிலையை அகற்றவில்லை.
இதையடுத்து, வருவாய்த்துறை மற்றும் போலீசார் சார்பில் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சிலை அகற்றும் பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். அப்போது தகராறில் ஈடுபட்டதாக, செல்வராஜ் மகன் அய்யப்பன், ராமலிங்கம் மகன் முத்துசாமி, தங்கவேல் மகன் ராஜ்குமார், சின்னமணி மகன் செல்வராஜ் ஆகிய 4 பேர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் தங்களின் பட்டா இடத்தில் ராஜராஜ சோழன் சிலையை அமைத்தனர்.