/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேர் திருவிழா பாதுகாப்பு; போலீசார் தீவிரம்
/
தேர் திருவிழா பாதுகாப்பு; போலீசார் தீவிரம்
ADDED : ஜூன் 12, 2025 10:28 PM

சின்னசேலம்; சின்னசேலம் அருகே தேர் திருவிழாவையொட்டி, போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுார் கிராமத்தில் புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஜூன் மாதம் தேர் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த விழாவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில், இந்தாண்டிற்கான விழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சிறிய தேர் பவனி நேற்று நடந்தது. தொடர்ந்து பெரிய தேர் பவனி இன்று நடக்க உள்ளது. இதனால்
போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் எஸ்.பி., ரஜத்சதுர்வேதி, ஏ.டி.எஸ்.பி., திருமால் தலைமையில் 4 டி.எஸ்.பி.,க்கள், 11 இன்ஸ்பெக்டர்கள், 24 எஸ். ஐ., க்கள் மற்றும் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.