ADDED : ஜன 17, 2024 07:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியில் பொங்கல் பண்டிகை விளையாட்டுப்போட்டிகள் நடந்து வருகிறது.
ஏமப்பேர் இளைஞர் மன்றம் சார்பில் 67ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகள் சிவன் கோவில் அருகில் உள்ள விளையாட்டு திடலில் நடந்து வருகிறது.
3ம் நாளான நேற்று கிரிக்கெட், கோலப்போட்டி, பூப்பந்தாட்டம், சிறுவர் கபடி, மாறுவேடப்போட்டி, கைப்பந்து, ஓட்டப்பந்தயம், சாக்கு ஓட்டம், குண்டு எறிதல், ஸ்பூனில் எலுமிச்சம் பழம் எடுத்து ஓடுதல், கயிறு தாண்டுதல், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகளுடன், மாணவ, மாணவியர் அறிவுத்திறன் போட்டிகளும் நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 4-ம் நாள் நிகழ்ச்சியாக மஞ்சுவிரட்டு உள்ளிட்ட பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் இன்று நடத்தப்படுகிறது.

