/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டாஸ்மாக்கில் போஸ்டர்: பா.ஜ., போராட்டம்
/
டாஸ்மாக்கில் போஸ்டர்: பா.ஜ., போராட்டம்
ADDED : மார் 21, 2025 07:01 AM

திருக்கோவிலுார் | : திருக்கோவிலுாரில் பா.ஜ.,வினர் டாஸ்மாக் கடைகளின் முன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருக்கோவிலுார் நகர பா.ஜ., சார்பில், சந்தப்பேட்டை, அரும்பாக்கம் டாஸ்மாக் கடைகள் முன், முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டி, கடையை மூடக்கோரி, ஆர்ப்பாட்டம் நடந்தது. சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பத்ரிநாராயணன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ஏழுமலை, அழகேசன் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
இதில், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற கோரியும், அதில் நடந்த ஊழலை கண்டித்தும், கோஷம் எழுப்பினர். திருக்கோவிலுார் போலீசார் போஸ்டர் ஓட்டுவதை தடுத்து நிறுத்தி, அங்கிருந்து அவர்களை அனுப்பி வைத்தனர்.