/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கல்
/
மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கல்
ADDED : மே 26, 2025 12:54 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கர பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், 30 பேருக்கு தலா ஒரு லட்சத்து ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பில் மொத்தம் 30 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 30 பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் சுப்ராயலு, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் அந்தோணிராஜ், ஒன்றிய சேர்மன்கள் அலமேலு ஆறுமுகம், சத்தியமூர்த்தி, தாமோதரன், துணைச் சேர்மன் விமலா முருகன்.
தி.மு.க., மாவட்ட அவைத் தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட பிரிதிநிதி பெருமாள், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆறுமுகம், காமராஜ், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர் முரளி, ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் ஜெய்சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.