/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரூ. 1லட்சத்துடன் மனைவி மகன் மாயம்: கணவர் புகார்
/
ரூ. 1லட்சத்துடன் மனைவி மகன் மாயம்: கணவர் புகார்
ADDED : ஜன 25, 2024 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம் : ரூ.1 லட்சம் ,18 சவரன் நகை மற்றும் மகனுடன் மனைவியை காணவில்லை என கணவர் புகார் செய்துள்ளார்.
கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் சக்திவேல், 38; இவரது மனைவி அன்னலட்சுமி, 26; நேற்று முன்தினம் வீட்டிலிருந்த இவர் தனது 5 வயது மகன், ரூ 1 லட்சம் பணம் மற்றும் 18 சவரன் தங்க நகையுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது குறித்த புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

