/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மதுபாட்டில் விற்பனை: 4 பேர் மீது வழக்கு
/
மதுபாட்டில் விற்பனை: 4 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 27, 2024 12:47 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்ட பகுதியில் மதுபாட்டில் விற்ற 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்ட பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு தினமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
அதன்படி நேற்று முன்தினம் மேற்கொண்ட ரோந்து பணியின் போது, பெரிசிறுவத்துார் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் பரசுராமன்,52; தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த சுப்பையன் மகன் பரமேஸ்வரன், கள்ளக்குறிச்சி சித்தேரி தெருவை சேர்ந்த பால்ராஜ் மகன் ராஜா, அகரக்கோட்டாலத்தை சேர்ந்த நாவு மகன் ராமசாமி ஆகிய 4 பேரும் வெவ்வேறு இடங்களில் மதுபாட்டில் விற்றது தெரிந்தது.
தொடர்ந்து, 4 பேர் மீதும் வழக்கு பதிந்து, அவர்களிடமிருந்த 26 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதேபோல், பொது இடத்தில் மது அருந்தியது தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

