/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஜி.அரியூர் மாதிரி பள்ளியில் குறு வட்ட விளையாட்டு போட்டி
/
ஜி.அரியூர் மாதிரி பள்ளியில் குறு வட்ட விளையாட்டு போட்டி
ஜி.அரியூர் மாதிரி பள்ளியில் குறு வட்ட விளையாட்டு போட்டி
ஜி.அரியூர் மாதிரி பள்ளியில் குறு வட்ட விளையாட்டு போட்டி
ADDED : செப் 27, 2025 02:23 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த ஜி.அரியூர் அரசு மாதிரி மேல்நிலைkf பள்ளியில் குறுவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
திருக்கோவிலுார் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருக்கோவிலுார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது. இதில் ஜி.அரியூர் அரசு மாதிரி மேல்நிலைkf பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். குழு விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகளில் 120 மாணவ, மாணவிகள் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜி.அரியூர் மாதிரி பள்ளி வளாகத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. உடற்கல்வி ஆசிரியர் திவ்யா வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர்கள் ஜோசப் தியாகராஜன், நிர்மலா முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சுதா தலைமை தாங்கி மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். ஆசிரியர் சுந்தரி நன்றி கூறினார்.

