/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சூரிய ஒளி சக்தியில் இயங்கும் வாகனம் வடிவமைப்பு
/
சூரிய ஒளி சக்தியில் இயங்கும் வாகனம் வடிவமைப்பு
ADDED : ஜூன் 07, 2025 01:33 AM

கள்ளக்குறிச்சி : சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் வாகனத்தை ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரி மாணவர்கள் வடிவமைத்தனர்.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., நினைவு மற்றும் பொறியியல் கல்லுாரியில் மின்னணு மற்றும் மின்னியல் துறையின் இறுதியாண்டு மாணவர்கள் வாகன உதிரிபாகங்களை கொண்டு பிரத்யேகமாக சூரிய ஒளி சக்தியில் இயங்கக்கூடிய மின் வாகனத்தை தயாரித்துள்ளனர்.
கல்லுாரி முதல்வர் சிவக்குமரன் மற்றும் பேராசிரியர்கள் தொழில்நுட்ப வழிகாட்டுதலில் இந்த மின் வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சூரிய ஒளி சக்தி மற்றும் பேட்டரியால் இயங்கக்கூடிய இந்த மின் வாகனம் மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் 350 கிலோ எடை தாங்கும் திறனுடன், 20 கி.மீ., துாரம் வரை செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
கல்லுாரி மாணவ மாணவியரை தாளாளர் மகேந்திரன், செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்தினர்.