/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இந்திய ஜனநாயக கட்சியின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்
/
இந்திய ஜனநாயக கட்சியின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஜன 27, 2024 12:58 AM
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டையில் இந்திய ஜனநாயக கட்சி யின் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் கலந்து கொண்டார்.
இந்திய ஜனநாயக கட்சியின் தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம் மாநில மாநாடு வரும் பிப். 17ம் தேதி திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில் நடக்கிறது.
அதனையொட்டி உளுந்தூர்பேட்டையில் இந்திய ஜனநாயக கட்சியின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு இந்திய ஜனநாயக கட்சியின் நிறு வனர் பாரிவேந்தர் எம்.பி., தலைமை தாங்கி பேசினார்.
கூட்டத்தில் கட்சியின் தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து, மாநில பொதுச் செயலாளர் ஜெயசீலன், முதன்மை செயலாளர் சத்தியநாதன், முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன், தலைமை நிலைய செயலாளர் வரதராஜன், பார்க்கவகுல முன்னேற்ற சங்க முதன்மை செயலாளர் அன்புதுரை, மாநில மகளிர் அணி செயலாளர் அமுதாராஜேஸ்வரன், துணைத் தலைவர்கள் ஆனந்தமுருகன் இளவரசி, விவசாய அணி செயலாளர் சபா ராஜேந்திரன், அமைப்புச் செயலாளர் அன்னை இருதயராஜ்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு மாநாட்டுக்கான அழைப்பிதழை கட்சியின் நிறுவனர் வழங்கினார்.

