/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'கல்லை விண்மீன்கள்' மாத இதழ் முதல் பதிப்பு- கலெக்டர் வெளியீடு
/
'கல்லை விண்மீன்கள்' மாத இதழ் முதல் பதிப்பு- கலெக்டர் வெளியீடு
'கல்லை விண்மீன்கள்' மாத இதழ் முதல் பதிப்பு- கலெக்டர் வெளியீடு
'கல்லை விண்மீன்கள்' மாத இதழ் முதல் பதிப்பு- கலெக்டர் வெளியீடு
ADDED : பிப் 23, 2024 10:18 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள 'கல்லை விண்மீன்கள்' என்ற மாத இதழ் வெளியீடு நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தனித்திறமையை வெளிக்கொணரும் விதமாக, சி.இ.ஓ., முருகனின் புதிய முயற்சியால் 'கல்லை விண்மீன்கள்' எனும் மாத இதழ் தொடங்கப்பட்டுள்ளது.
இதில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எழுதிய கவிதை, கட்டுரை, கதை, நாடகம், ஓவியம், அறிவியல் போன்ற படைப்புகள், உள்ளூர் மாவட்டம் சார்ந்த முக்கிய தகவல்கள், சட்ட விதிகள் உள்ளிட்ட பொதுஅறிவு சார்ந்த தகவல்கள் பிரசுரிக்கப்படுகிறது.
மாணவர்களின் சிந்தனை திறனை துாண்டி, ஊக்கப்படுத்தும் வகையில், 48 பக்கங்களுடன் அச்சிடப்பட்ட 'கல்லை விண்மீன்கள்' இதழின் முதல் பதிப்பினை கலெக்டர் ஷ்ரவன்குமார் நேற்று வெளியிட்டார்.
இதழ் தயாரிப்பில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அப்போது, சி.இ.ஓ., முருகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஜோதிமணி, லதா, துரைராஜ் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர். மாதந்தோறும் வெளியாகும் கல்லை விண்மீன்கள் இதழ், வட்டார வள மையம் வழியாக அனைத்து ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கும் இலவசமாக அனுப்பி வைக்கப்படுகிறது.