/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன்மலை சிறப்பு செயலாக்க திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம்
/
கல்வராயன்மலை சிறப்பு செயலாக்க திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம்
கல்வராயன்மலை சிறப்பு செயலாக்க திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம்
கல்வராயன்மலை சிறப்பு செயலாக்க திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம்
ADDED : செப் 29, 2025 12:59 AM

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை பகுதிக்கான சிறப்பு செயலாக்க திட்டம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் லட்சுமி பிரியா தலைமை தாங்கினார். கலெக்டர் பிரசாந்த் முன்னிலை வகித்தார்.
பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கல்வராயன்மலை பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்கு, கால்நடை பராமரிப்பு, தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
கல்வராயன்மலையில் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தி, மதிப்புக் கூட்டு அலகு அமைத்தல், தோட்டக்கலைப் பயிர்கள், வெள்ளாடு மற்றும் வெண்பன்றி வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டங்கள் குறித்து பல்வேறு துறை சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஆலோசனை நடந்தது.
கல்வராயன்மலைப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுயதொழில் வாழ்வாதார மேம்பாட்டுப் பணிகளில் அதிக முக்கியத்துவம் கொடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தங்களது துறை சார்ந்த பணிகளை அற்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும் என அரசு செயலாளர் லட்சுமிபிரியா அறிவுறுத்தினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, பழங்குடியினர் நல அலுவலர் அம்பேத்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

