/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் தைப்பூச விழா
/
சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் தைப்பூச விழா
ADDED : ஜன 25, 2024 11:44 PM

சங்கராபுரம் : சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் தை பூச விழா நடந்தது.
இதனையொட்டி நேற்று காலையில் நடந்த சன்மார்க்க ஊர்வலத்திற்கு வள்ளலார் மன்றத் தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது. பின் வள்ளலார் மன்றத்தில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டு, அகவல் பாராயணத்தை தொடர்ந்து பகல் 12 மணிக்கு ஜோதி தரிசனம் நடந்தது.
பின் வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ்,மன்ற பொருளாளர் முத்துக்கருப்பன்,தணிக்கையாளர் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் இன்னர்வில் கிளப் தலைவி கவுரி விஜயகுமார், கலாவதி ஜனார்தனன்,கல்யாணி முத்துக்கருப்பன் ஆகியோர் அன்னதானத்தை துவக்கிவைத்தனர். விழாவில் ரோட்டரி அரிமா,வியாபாரிகள் சங்கம்,இன்னர் வீல் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

