/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முருகன் கோவில்களில் தைப்பூச விழா
/
முருகன் கோவில்களில் தைப்பூச விழா
ADDED : ஜன 25, 2024 11:42 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி முருகன் கோவிலில் தைப்பூச விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை முருகனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து வைத்து, பல்வேறு வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
தைப்பூச விழாவில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பலர் பங்கேற்று தரிசனம் செய்தனர். அதேபோல் கள்ளக்குறிச்சி காமாட்சி அம்மன் கோவில், நீலமங்கலம் சொர்ணபுரீஸ்வரர், ஏமப்பேர் ஏகாம்பரேஸ்வரர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், தென்கீரனுார் அருணாசலேஸ்வரர் ஆகிய கோவில்களிலும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தி தைப்பூச விழா நடந்தது.

