/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பி.ஏ.சி.எல்., நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்மழையிலும் மனு அளிக்க குவிந்ததால் பரபரப்பு
/
பி.ஏ.சி.எல்., நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்மழையிலும் மனு அளிக்க குவிந்ததால் பரபரப்பு
பி.ஏ.சி.எல்., நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்மழையிலும் மனு அளிக்க குவிந்ததால் பரபரப்பு
பி.ஏ.சி.எல்., நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்மழையிலும் மனு அளிக்க குவிந்ததால் பரபரப்பு
ADDED : ஜன 09, 2024 10:28 PM

கள்ளக்குறிச்சி, - பி.ஏ.சி.எல்., நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் 20 நாட்களுக்கு பிறகு பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், பி.ஏ.சி.எல்., நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் மனு அளிக்க திரண்டு, நீண்ட வரிசையில் நேற்று காத்திருந்தனர்.
இது குறித்து மனு அளிக்க வந்த பொதுமக்கள் கூறியதாவது: கடந்த 1996ம் ஆண்டு டெல்லியை தலைமையிடமாக கொண்டு பி.ஏ.சி.எல்., என்ற நிறுவனம் செயல்பட்டது. இந்நிறுவனத்தில் தவணை முறையில் முதலீடு செய்தால் பாலிசி முடிவில் வீட்டுமனை கிடைக்கும் எனவும், வீட்டுமனை தேவையில்லை என்றால் முதலீடு செய்த பணத்தை இரட்டிப்பாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் ஏஜென்டுகள் தெரிவித்தனர். அதன் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த நுாற்றுக்கணக்கான மக்கள் முதலீடு செய்துள்ளனர்.
குறிப்பிட்ட சில வருடங்களுக்கு பிறகு பி.ஏ.சி.எல்., நிறுவனத்தில் இருந்து போதுமான தகவல் கிடைக்கப்பெறவில்லை. இதனால் நாங்கள் தவணை முறையில் செலுத்திய பணத்தை இழந்து ஏமாற்றமடைந்தோம். இது தொடர்பான விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.
அதில், நிறுவனத்தின் முதலீடு பணத்தை மீட்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 6 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என கடந்த 2016ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், 7 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை எங்களுக்கு பணம் கிடைக்கவில்லை. எனவே, நாங்கள் செலுத்திய பணத்தை வட்டியுடன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

