ADDED : ஜூன் 11, 2025 07:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வைகாசி விசாக கருட சேவை உற்சவம் நடந்தது.
அதனையொட்டி, நேற்று முன்தினம் மாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ பெருமாள், உபயநாச்சியார் உற்சவர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளச் செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பக்தர்களால் நாலாயிர திவ்ய பிரபந்தம் வாசிக்கப்பட்டது. பின், நாம சங்கீர்த்த பஜனை நடந்தது. ஏற்பாடுகளை தேசிக பட்டர் குழுவினர் செய்திருந்தனர்.