/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்யாண முருகன் கோவிலில் வேல் வழிபாடு
/
கல்யாண முருகன் கோவிலில் வேல் வழிபாடு
ADDED : ஜூன் 17, 2025 10:54 PM

கள்ளக்குறிச்சி; கல்வராயன்மலை ஒன்றிய இந்து முன்னணி சார்பில் வெள்ளிமலை கல்யாண முருகன் கோவிலில் வேல் வழிபாடு நடந்தது.
மதுரையில் ஜூன் 22ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற வேண்டி மாவட்டம் முழுதும் இந்து முன்னணி சார்பில் வேல் வழிபாட்டு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வெள்ளிமலை கல்யாண முருகன் கோவிலில் நேற்று நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
சிறப்பு அழைப்பாளர்கள் மாவட்ட இந்து முன்னணி ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், சேலம் மாவட்ட செயலாளர் பிரசாந்த் ஆகியோர் மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
ஏற்பாடுகளை கல்வராயன்மலை இந்து முன்னணி ஒருங்கிணைப்பாளர் செந்தில் செய்திருந்தார்.