/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அம்மையகரத்தில் கிராம சபை கூட்டம்
/
அம்மையகரத்தில் கிராம சபை கூட்டம்
ADDED : ஜன 27, 2024 12:50 AM
கள்ளக்குறிச்சி: குடியரசு தினத்தை முன்னிட்டு அம்மையகரத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது.
குடியரசு தினத்தையொட்டி சின்னசேலம் அடுத்த அம்மையகரத்தில் நேற்று காலை நடந்த கிராம சபை கூட்டத்திற்கு, ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் ரவிசங்கர், ஜெகநாதன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் சிவஞானம் வரவேற்றார். ஊராட்சி செயலாளர் விஜயகாந்த் தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில், தகுதிவாய்ந்த பயனாளிகள் அனைவருக்கும் பிரதம மந்திரியின் வீடுகட்டும் திட்டத்தில் பயனடைய வழிவகை செய்தல், குடிநீர் பிரச்னைக்கு முன்னுரிமை கொடுத்தல், அடிப்படை தேவைகளை நிறைவேற்றுதல் உட்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மாவட்ட கவுன்சிலர் கலையரசி, ஊராட்சி துணைத்தலைவர் முரளி மற்றும் கிராம பொதுமக்கள், துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

