/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிரஷர் உரிமையாளர்களுக்கு நடை சீட்டு: விண்ணப்பம் வரவேற்பு
/
கிரஷர் உரிமையாளர்களுக்கு நடை சீட்டு: விண்ணப்பம் வரவேற்பு
கிரஷர் உரிமையாளர்களுக்கு நடை சீட்டு: விண்ணப்பம் வரவேற்பு
கிரஷர் உரிமையாளர்களுக்கு நடை சீட்டு: விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூன் 15, 2025 10:35 PM
கள்ளக்குறிச்சி; பதிவு பெற்ற கிரஷர் உரிமையாளர்கள், கனிம முகவர்கள் தங்களுக்கு தேவைப்படும் நடை சீட்டுகளை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
கனிம சேமிப்பு இருப்பு கிடங்குகளிலிருந்து எம் சாண்ட, பி சாண்ட், ஜல்லி போன்ற இரண்டாம் நிலை கனிமங்களை கொண்டு செல்ல புவியியல், சுரங்கத் துறையினரால் நடை சீட்டுகள் நேரடியாக வழங்கப்பட்டு வந்தன. ஆனால் வரும் 12ம் தேதியிலிருந்து இணைய வழியாக (டிரான்சிட் பாஸ்) வழங்கப்படும். இனி அலுவலகத்தின் வழியே நேரடியாக நடை சீட்டு வழங்கப்படாது.
எனவே, பதிவு பெற்ற கிரஷர் உரிமையாளர்கள், கனிம முகவர்கள் தங்களுக்குத் தேவைப்படும் நடை சீட்டுகளை https://www.mimas.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
நடை சீட்டு பெற்ற வாகனங்களை மட்டுமே இயக்க வேண்டும், தவறும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.