/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண்ணின் படத்தை மார்பிங் செய்த மர்ம நபருக்கு வலை
/
பெண்ணின் படத்தை மார்பிங் செய்த மர்ம நபருக்கு வலை
ADDED : பிப் 06, 2024 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை, : உளுந்துார்பேட்டையில் பெண்ணின் படத்தை மார்பிங் செய்து மொபைல் எண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 35 வயது பெண். திருமணமானவர். இவரது பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி ஐ.டி., உருவாக்கி அவரது புகைப்படத்தை மார்பிங் செய்து மொபைல் போன் எண்ணுடன் மர்ம நபர் பதிவிட்டுள்ளார்.
இதனால் தவறான அழைப்புகள் வந்ததால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அளித்த புகாரின் பேரில், உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.