/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி பகுதிக்கு வரும் பா.ஜ.,தலைவருக்கு வரவேற்பு
/
கள்ளக்குறிச்சி பகுதிக்கு வரும் பா.ஜ.,தலைவருக்கு வரவேற்பு
கள்ளக்குறிச்சி பகுதிக்கு வரும் பா.ஜ.,தலைவருக்கு வரவேற்பு
கள்ளக்குறிச்சி பகுதிக்கு வரும் பா.ஜ.,தலைவருக்கு வரவேற்பு
ADDED : ஜன 28, 2024 06:24 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை (29ம் தேதி) நடைபெறும் என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என மாவட்ட தலைவர் அருள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக பா.ஜ., சார்பில் நாளை (29ம் தேதி) காலை 10 மணிக்கு சங்கராபுரம் சட்டசபை தொகுதியிலும், மாலை 4 மணிக்கு ரிஷிவந்தியம் தொகுதியிலும், மாலை 6 மணிக்கு கள்ளக்குறிச்சி தொகுதியிலும் என் மண் என் மக்கள் பாத யாத்திரை நிகழ்ச்சியில் பா.ஜ., தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு, பொதுமக்களை சந்தித்து பேசுகிறார்.
நிகழ்ச்சிக்கு வரும் மாநில தலைவருக்கு கட்சி நிர்வாகிகள் அனைவரும் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
இந்திய ஜனநாயக கட்சி, காந்திய மக்கள் இயக்கம் மற்றும் பொதுமக்கள் சார்பிலும் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
நிகழ்ச்சியில் பா.ஜ.,வை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

